இந்திரிய ஒழுக்கம், கன்மேந்திரிய ஒழுக்கம், ஞானநேந்திரிய ஒழுக்கமென இருவகைப்பட்டது, கொடிய சொல் செவி புகாது நாதம் முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்டல்; அசுத்த பரிசமில்லாது தயா வண்ணமாகப் பரிசித்தல்; குரூரமாகப் பாராதிருத்தல்; உருசி (சுவை) விரும்பாதிருத்தல்; சுகந்தம் விரும்பாதிருத்தல்; இன் சொல்லாடல்; பொய் சொல்லாதிருத்தல்; ஜீவஹிம்சை நேரிடுங் காலத்தில் எவ்வித தந்திரத்தினாலாவது தடை செய்தல்; பெரியோர்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்; ஜீவ உபகார நிமித்தமாய் சாதுக்கள் வாசஸ்தானங்களிலும் திவ்ய திருப்பதிகளிலும் சஞ்சரித்தல்; நன் முயற்சியில் கொடுத்தல்; எடுத்தலாதி செய்தல்; மலஜல உபாதிகளை அக்கிரமம் அதிக்கிரமம் இன்றி கிரமத்தில் நிற்கச் செய்வித்தல், எவ்விதமெனில், மித ஆகாரத்தாலும் மித போகத்தாலும் செய்வித்தல், கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஔஷதி வகைகளாலும் பௌதிக மூலங்களாலும், சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும், மூலாங்கப் பிரணவத் தியான சங்கற்பத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளல்; சுக்கிலத்தை அக்கிரம அதிக்கிரமத்தில் விடாது நிற்றல் - மந்ததரம், தீவிரதரம் எவ்வகையிலுஞ் சுக்கிலம் வெளிப்படாமல் செய்வித்தல்; இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல், இதுபோல் உச்சி மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்; சஞ்சரிக்குங் காலத்தில் காலிற் கவசந்தரித்தல்; அழுக்காடை உடுத்தாதிருத்தல் முதலியன இந்திரிய ஒழுக்கமாம்.

கரண ஒழுக்கமாவது: மனத்தைச் சிற்சபை என்னும் அறிவாகிருதி ஆக்கல்: இதன் பூர்வத்தில் புருவமத்தியில் நிற்கச் செய்தல்; இதன்றி, துர்விஷயத்தைப் பற்றாதிருக்கச் செய்தல்; சீவதோஷம் விசாரிய திருத்தல்; தன்மதிப்பில்லா திருத்தல்; இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல், தனது தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல்.

ஜீவ ஒழுக்கமாவது: ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோரேன்னும் பேதம் நீங்கி, எல்லவரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது.

ஆன்ம ஒழுக்கமாவது: யானை முதல் எறும்பு வரை தோன்றிய ஜீவர்களினது சூக்குமம் தனி தலைவன் ஆதலால் அவ்வச் சீவர்களின் ஆன்மாவே திருச்சபை அதனுள் ஒளியே பதியாய் நிற்பதால் யாதும் நீக்கமறக் கண்டு எவ்விடத்தும் பேதமற்று எல்லாந் தானாக நிற்றல்.

This Discipline for Organs of Senses has classified into two. [1]Discipline for Visible (Bodily) Organs. [2]Discipline for Invisible (Mental) Organs. Do Hearing Nadham (Kind of spiritual sound) like chants and Not to terrible word. Do Touching with Grace and Not with impure. Do not look harshly. Do not be eager to taste. Do not be eager to aroma. Do talk pleasant word. Do not lie. Do Obstruct the violence against beings at the time with any tricks. Do Visit the places of elderly. Do Visit the dwellings of sadhus (Holy men) and other places in the aspect of Vital aid. Do Give, Take with good effort. Do Maintain excreta as normal (Standard) not as abnormal(Less, More) by these ways, By taking moderate food and moderate enjoyments. If obstructed due to Time variation, Heat prostration than cure it by Oshathi Vagaigal (Sukku - Dry ginger), Boudhiga Moolangal (Basmams - Medicinal metal powders), Sarabedha, Asthaparisa (Spritual tactics), Moolanga pranava dhyana (Deep meditation). Do not ejaculate abnormally. Do not ejaculate (semen) in Casual, Intense stages and in any ways. Do Cover Genitals continuously. Do Cover Head, Chest like parts continuously. Do Wear Foot wears at the time of walk. Do not wear unclean dress. These are all Discipline for Organs of Senses.

Discipline for faculties of mind is: Do Create inteligence with Sirsabai (Spritual invisible place in body) in mind. Do Hold this in centre of brows originally. Do not hold dirty things in mind. Do not enquire ethics of beings. Do not hold self worth. Do omit sources of Raagam (Holding things) and Be in nature Sathuvam (Holding oneself). Do hold Principle of Nature without acting it abnormally.

Discipline for Beingness is: From Men, Women to everyone, consider all as ourself equally by eliminating, Caste, Sect, Religion, Aasiramam (vedic division), Division affiliated to nature of work, Division comes under sect, Tribe, Division affiliated to sasthiram (Ancient literature that guides DoS and DontS), Nationalities, Superiority, Inferiority.

Discipline for soul is: Raised beings from elephant to ants have special lord invisibly. So.., In those beings, Soul of being is Reverent hall, Soul of god is Standing as Guru. To become all as self by Everything without omission, Everywhere without variation.